சத்தீஸ்கர் – ஒடிசா எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் ஹரியபெண்ட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.