பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த சங்கராந்திக்கு ஒஸ்தானு ஆகிய இரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் வெளியானது. இந்த படங்களை பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவருமான தில்ராஜ் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், தில்ராஜுவின் ஹைதராபாத் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
55 அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து 8 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துகின்றனர். தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ் மற்றும் மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெறுகிறது.