சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவத்திற்கான தேர்வு குழு அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், நீட் கட் ஆஃப் மதிப்பெண்கள் உயர்வால் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தற்போது இந்திய மருத்துவ படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்திய மருத்துவத்திற்கான தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.