பாரிஸில் டிஸ்னிலேண்ட் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
சிண்ட்ரெல்லா, ஸ்டார் வார்ஸ், டாய் ஸ்டோரி, பீட்டர்பேன் போன்ற பெயர்களைக் கேட்டாலே, அதில் வாழ்ந்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
அந்தளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருப்பார்கள். இதற்கான கண்காட்சி உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் டிஸ்னிலேண்ட் கண்காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் விதமாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.