டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை அரிட்டாபட்டி மக்களுக்ககு நாளை மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், டங்ஸ்டன் விவகாரத்தில் தீர்வு அளிப்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும் அரிட்டாபட்டி மக்களுக்ககு நாளை மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கும் என தெரிவித்தார்.
அரிட்டாபட்டி மக்களுக்கு தமிழக பாஜக துணை நிற்கும், என்றும், நாளை அரிட்டாபட்டி மக்களுடன் மத்திய அமைச்சரை சந்திக்கிக் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆர்கே நகர் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் தீக்குளித்தது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். காவல் துறையில் இதுபோல் நடப்பது சாமானிய மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.