அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகருக்கு ஜாமின் வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் சதீஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி, வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்டார்.
அதேபோல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, முன்னாள் அதிமுக பிரமுகர் சுதாகரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் ராஜி, முன்னாள் அதிமுக பிரமுகர் சுதாகர் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.