கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிரபல நகைக் கடையில் நூதன முறையில் தங்க நகைகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒசூர் அருகே உள்ள பாகலூரில் பிரபல நகைக் கடைக்கு, கடந்த 19 -ஆம் தேதி புர்க்கா அணிந்தபடி 2 பெண்களும், ஒரு ஆணும் வருகை தந்தனர்.
அவர்கள் 3 பேரும், தாங்கள் கொண்டு வந்த எடை குறைந்த நகைகளை கடையில் வைத்துவிட்டு எடை அதிகம் உள்ள நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.