துருக்கியில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கி நாட்டின் போலு மாகாணத்தில் சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டலில், நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் பலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.
ஒரு சிலர் உயிர் பிழைத்த நிலையில், பெரும்பாலானோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்த 51 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.