உலக பிக்கில் பால் தொடருக்கான சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியின் ஜெர்சியை அணியின் உரிமையாளரான சமந்தா வெளியிட்டார்.
பிரபல நடிகையும், சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியின் உரிமையாளருமான சமந்தா, சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைக் கழகம் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை அணியின் ஜெர்சியை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், பிக்கில் பால் விளையாட்டு மூலம் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக தெரிவித்தார். சென்னை சூப்பர் சாம்ப்ஸ் பங்கேற்கும் முதல் போட்டி வரும் 24 -ம் தேதி நடைபெறுகிறது. இதில், சத்தியபாமா பல்கலைக் கழக அணி முக்கிய பார்ட்னராக அறிவிக்கப்பட்டுள்ளது.