ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
திருமலையில் உள்ள அன்னபிரசாத கூட்டத்தில் பக்தர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், பொரியல், சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும் நிலையில், மேலும், ஒரு பிரசாதத்தை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன் சோதனை முயற்சியாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாப்பாட்டுடன் மசால் வடை பரிமாறப்பட்டது. பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட மசால் வடை சுவையாக இருப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ரதசப்தமி நாளான பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மசால் வடையுடன் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.