கோவை மாவட்டம் காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் நகைள் திருடப்பட்ட வழக்கில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டர்.
கடந்த டிசம்பர் குட்டையூர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவரின் வீட்டின் பூட்டை, உடைத்து ஒன்பது சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இந்நிலையில் சென்னி வீராணம் பாளையத்தில், மதுபோதையில் வந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, சுமதி வீட்டில் திருடிய கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஐந்தே முக்கால் சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.