ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவதற்கு, தேவைப்பட்டால் சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடுவோம் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவோம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.