உதயநிதி விரைவில் சிறை செல்வார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் செம்பொன்நகர் மீனவ பகுதியில் பாஜக சார்பில் சுவாமி விவேகானந்தரின் 162-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக குற்றம்சாட்டினார். சனாதனம் குறித்து பேசியதற்காக வெளிமாநிலங்களில் இருந்து உதயநிதிக்கு சம்மன் வந்து கொண்டிருக்கிறது எனவும் விரைவில் அவர் சிறை செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தார்.
இந்து மதத்தை யாராலும் ஒழிக்க முடியாது என சூளுரைத்த ஹெச்.ராஜா, நாட்டை போற்றுபவர்கள் பாஜகவிற்கு கிளம்பி வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.