கொல்கத்தா விமான நிலையத்தில் செயல்படும் மலிவு விலை உணவகம் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விமான நிலையங்களில் உணவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணையத்துடன் (AAI) இணைந்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே ஒன்றை அமைத்தது. எனினும் இது தனியரால் நிர்வகிக்கப்படுகிறது.
இங்கு தேனீர், குடிநீர் ரூ10க்கும், காபி, இனிப்பு மற்றும் சமோசா ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, நாள்தோறும் 900 வாடிக்கையாளர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது நாட்டிலேயே முதல்முதலாக அமைக்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.