வணங்கான் படத்திற்கு தமிழக மக்கள் அற்புதமான வரவேற்பை அளித்துள்ளதாக நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் குதிரை ஓட்ட பயிற்சி நிறுவனத்தில் பயிலும் நபர்கள், தேசிய அளவிலான குதிரை ஓட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
குதிரை ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்காக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய், குதிரை ஓட்ட திறனை கண்டு களித்ததுடன், தானும் குதிரை மீது ஏறி சவாரி செய்தார். பின்னர், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.