நேதாஜி கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப பாடுபடுவோம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பராக்கிரம தினமான இன்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என தெரிவித்துள்ளார்.
அவர் துணிச்சலும் மன உறுதி மிக்கவர் என்றும், அவர் கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடுவோம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது தொலைநோக்குப் பார்வை தொடர்ந்து நம்மை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.