மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்து 50 ஆயிரம் ரூபாயை பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வழங்கியுள்ளார்.
மும்பையில் தனது வீட்டில் இருந்த சைஃப் அலி கான், கொள்ளையர் கத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரை பஜன் சிங் ராணா என்பவர் மீட்டு தனது ஆட்டோ ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நலமுடன் திரும்பிய சைஃப் அலி கான், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை சந்தித்து நன்றியை தெரிவித்து கொண்டதோடு 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.