திமுக அரசின் இயலாமையால் நாகை மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிபிசிஎல் விரிவாக்க திட்டம் ஆந்திர மாநிலத்திற்கு சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நாகையில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு ஓடுவதாகவும், ஜவுளி தொழில் நலிவடைந்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாஜகவின் திட்டங்களை தடுத்து நிறுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் அந்த திட்டங்களை கொண்டு வருவாரா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுவதாகவும் ஓ.எஸ்.மணியன் விமர்சித்தார்.