உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் உரையாற்றிய அஷ்வினி வைஷ்ணவ்,
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக நாடுகளின் வரவேற்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.