திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாக புகார் எழுந்த நிலையில், ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர் மலை மீது ஏறி, சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழிகளை வெட்டி பலி கொடுக்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையிலான இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர், திருப்பரங்குன்றம் மலை மீது அமர்ந்து பிரியாணி உண்டனர்.
இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர், காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.