ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏதுவாக, விண்ணப்பப் படிவம் 12-டி வழங்கப்பட்டது. இதனை, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 4 குழுக்களாக பிரிந்து, வீடு வீடுடாகச் சென்று தபால் வாக்குப்பதிவு செய்யும் பணியில் தேர்தல் ஆணைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கி 24, 25 மற்றும் 27-ம் தேதி என மொத்தம் 4 நாட்கள் இந்த பணி நடைபெற உள்ளது. இந்நிலையில், செங்கோட தெருவில் உள்ள பாக்கியம் என்ற மூதாட்டி, முதல் நபராக தபால் வாக்கு செலுத்தினார்.