பேருந்துகள் வெளியில் நின்று செல்வதற்கு தான் புதிய பேருந்து நிலையம் கட்டி விடப்பட்டதா? என கேள்வி எழுப்பி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசு பேருந்துகள் முறையாக பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர், பேருந்து நிலையத்திற்குள் வராத பேருந்துகளை இயங்க விடமாட்டேன் என ஊழியர்களிடம் கடிந்துகொண்டார்.