இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக முந்திரி பருப்பு என்ற பெயரில் கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்த விவகாரத்தில் திமுக கவுன்சிலரை மத்திய புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து கொட்டைப்பாக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையை சேர்ந்த ஒரு ஷிப்பிங் நிறுவனம், வரி ஏய்ப்பு செய்யும் வகையில் இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக முந்திரி பருப்பை இறக்குமதி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் முந்திரி பருப்புக்கு பதிலாக கொட்டைப் பாக்கு இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வரிஏய்ப்பு மோசடிக்கு உதவியாக தூத்துக்குடி மாநகராட்சி 18ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சீனிவாசன் இருந்து தெரியவந்தது.
இதனை அடுத்து திமுக கவுன்சிலர் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.