குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள சத்தீஸ்கரைச் சேர்ந்த பைகா பழங்குடியினர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பட்பரி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பைகா பழங்குடியின குடும்பங்கள் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், குடியரசுத் தலைவரை சந்திக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவரிடம் இருந்து அழைப்பு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பைகா பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அழைப்பு தங்கள் மாவட்டத்தையும் பெருமைப்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.