பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் செய்வதற்காக பொய்யாக புதிய கிராமத்தையே அரசு அதிகாரிகள் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாப்பில் நலத்திட்ட உதவிகளுக்கான அரசின் பணத்தில் ஊழல் செய்வதற்காக கடந்த 2018-2019ஆம் ஆண்டில் நியூ கட்டி ராஜோ கி என்ற புதிய கிராமம் இருப்பதாக அரசு அதிகாரிகள் ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
உண்மையிலேயே இல்லாத இந்த கிராமத்தின் நலத்திட்ட பணிகளுக்காக 43 லட்சம் ரூபாயை செலவிட்டதாகவும் காண்பித்து அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
தன்னார்வலர் ஒருவரின் முயற்சியால், நியூ கட்டி ராஜோ கி என்ற கிராமத்திற்கு தனி பஞ்சாயத்து ஏற்படுத்தப்பட்டதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஃபெரோஸ்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.