லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி, அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பால் தேடப்பட்டு வந்தார்.
கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து ஏதென்ஸ் நோக்கிச் சென்ற விமானம் கடத்தப்பட்டது. அதில் அமெரிக்கர் ஒருவரை கொலை செய்ததில் ஷேக் முகமது முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில் கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஷேக் ஹமாதி, தனது வீட்டின் முன், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது 6 குண்டுகள் பாய்ந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.