வந்தே பாரத் ரயிலின் முதலாவது பெண் லோகோ பைலட்டுக்கு, டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
டாடா நகர் மற்றும் பாட்னா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் உதவி லோகோ பைலட்டாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ரித்திகா டிர்கி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரே வந்தே பாரத் ரயிலின் முதலாவது பெண் லோகோ பைலட் எனும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இவரை கௌரவிக்கும் விதமாக குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வருமாறு அழைப்பிதழ் அனுப்பட்டுள்ளது.
சமீபத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த மின்னஞ்சலை பொய் என நினைத்ததாகவும், தற்போது உண்மையிலேயே வீடு தேடி அழைப்பிதழ் வந்துள்ளதாகவும் ரித்திகா தெரிவித்துள்ளார்.