அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்தது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக ஏற்கனவே அபிராமபுர காவல் நிலைய எழுத்தர் மருதுபாண்டியனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன், அபிராமபுர காவல் நிலையத்தை சேர்ந்த மற்ற காவலர்களிடமும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக அபிராமபுர காவல் நிலைய எழுத்தர் மருது பாண்டியன் மீது தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.