தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, இன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக, பெங்களூரில் பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கும்படி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில், பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் மருத்துவமனைகளை பிங் நிற விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.