குழந்தை பருவ வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ் : இணையத்தில் வைரல் - சிறப்பு தொகுப்பு!
Aug 26, 2025, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தை பருவ வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ் : இணையத்தில் வைரல் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் தான் எழுதிய புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விதமாக, தனது பள்ளிப்பருவ நிகழ்வை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

அமெரிக்க தொழிலதிபரும், உலக பணக்காரர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ், பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமாவார். இவர் அண்மையில், தனது குழந்தை பருவம் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘SOURCE CODE’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த புத்தகத்தில், பில் கேட்ஸ் தனது வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்த உறவுகள் பற்றியும், கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் அனுபவங்கள் பற்றியும் கதையாக விவரித்துள்ளார்.

இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பில் கேட்ஸ் வெளியிட்டார். அதில் மாட்டின் நுரையீரலுடன் காட்சியளித்த பில் கேட்ஸ், தான் 4-ம் வகுப்பு படித்தபோது வகுப்பறைக்கு மாட்டின் நுரையீரலை எடுத்துச் சென்ற நிகழ்வு பற்றி பேசியுள்ளார்.

வாஷிங்டன்னில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்ற பில் கேட்ஸிடம், அவரது வகுப்பாசிரியை கார்ல்சன் சுவாரஸ்யமாக எதையாவது கொண்டு வந்து அதுபற்றி விவரிக்குமாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் கூறியது பற்றி தனது தந்தையிடம் கலந்துரையாடிய பில் கேட்ஸ் அவரது ஆலோசனைப்படி, கசாப்புக்கடையில் இருந்து மாட்டின் நுரையீரலை வாங்கியுள்ளார். பின்னர் அதனை வெள்ளை காகிதத்தில் பொதிந்து வகுப்பறைக்கு எடுத்துச் சென்றார்.

அங்கே பில் கேட்ஸ் தான் கொண்டு வந்த வெள்ளை காகிதத்தை பிரித்தபோது, உள்ளே மாட்டின் நுரையீரல் இருப்பதை கண்ட வகுப்பாசிரியையும், சக மாணவர்களும் அதிர்ச்சி மற்றும் அருவருப்பு போன்ற உணர்வுகளால் வாயடைத்துப் போனார்கள்.

கையுறை எதையும் பயன்படுத்தாமல் வகுப்பறையில் மாட்டு நுரையீரலை பயன்படுத்தி அதன் சுவாச செயல்முறை குறித்து பில் கேட்ஸ் விவரித்தபோது, சக மாணவி ஒருவர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதுபற்றி வீடியோவில் குறிப்பிட்ட பில் கேட்ஸ், தனது வகுப்பாசிரியை கார்ல்சன், “செயல்முறை விளக்கம் மிக நன்றாக இருந்தது, ஆனால் முதலில் அதை இங்கிருந்து எடுத்துச் சென்றுவிடு” என அருவருப்பு நிறைந்த தொனியில் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

‘SOURCE CODE’ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள தனது பல குழந்தை பருவ கதைகளில் இதுவும் ஒன்று என வீடியோவில் பில் கேட்ஸ் கூறியுள்ளார். இந்த புத்தகம் வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

Tags: Microsoft companySOURCE CODEcow's lungamericaBill Gatessocial mediaBill Gates shares childhood video
ShareTweetSendShare
Previous Post

மங்களூரு வங்கியில் 15 கிலோ நகைகள் கொள்ளை – நெல்லை அருகே மீட்பு!

Next Post

பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி புகார்!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies