திருச்செந்தூர் முருகன் கோயிலில், நான்கு நாட்களாக நடைபெற்று வந்த கோபுர கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு,
137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களில் புதிய நவதானியங்ளை வைத்து கும்பங்களை பொருத்தும் பணி நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கருங்காலி மரத்தில் சுமார் 8 அடி உயரம் கொண்ட 9 கும்பங்கள் பொருத்தப்பட்டததை அடுத்து இந்த பணிகள் நிறைவு பெற்றன.