சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை தாக்கிய 3 தேவாலய மத போதகர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்ப்பட்டனர்.
அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் சிலர் சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தச் சென்ற சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது 12 பேர் தாக்குதல் நடத்தவே, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அனுமதி இல்லாமல் பொதுமக்களிடம் நிதி திரட்டியதாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் 13 கோடி ரூபாய் பணம், இரண்டரை கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி இருப்பதாக தகவல் வெளியானதால், திருமண மண்டபத்தை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.