அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்புகளை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி 1963ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இதேபோல், 1968ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கும், அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ராபர்ட் எஃப் கென்னடியும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான விசாரணை ஆவணங்கள் பல ஆண்டுகளாக முழுமையாக வெளியிடப்படாமல் இருந்தன. இந்நிலையில், ஜான் எஃப். கென்னடி, ராபர்ட் எஃப். கென்னடி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் படுகொலை தொடர்பான கோப்புகளை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.