மங்களூருவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கர்நாடகா சிறப்பு படையினர் மீட்டனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடித்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முருகாண்டி ஜோசுவா மற்றும் கண்ணன் மணி ஆகியோரை கர்நாடகா சிறப்பு படையினர் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், களக்காடு பத்ம நேரி பகுதியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.
மேலும், நகைகளை பதுக்கி வைத்திருந்ததாக முருகாண்டியின் தந்தை சண்முக சுந்தரத்தை கர்நாடகா சிறப்பு படையினர் கைது செய்தனர்.