இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு அமெரிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் சிறந்த சேவைக்கான விருதை, அமெரிக்க வானிலை தொழில்நுட்ப ஆய்வு ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறந்த முறையில் புயல் முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக,
மொஹபத்ராவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ள மொஹபத்ரா, உலக வானிலை அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும், ஐ.நா. வானிலை முகமையின் 3வது துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறாா்.