தன்னை அஸ்வினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், அவரது இடத்தை பிடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி சென்னை வந்த நிலையில், பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அஷ்வினுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று தெரிவித்த வருண்,அவரது இடத்தை பிடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்தார். மேலும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தான் தன்னை மெருகேற்ற உதவியதாகவும் வருண் சக்கரவர்த்தி தெரிவித்தார்.