இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒரு வசதியை, வாட்ஸ்அப் விரைவில் தனது புதிய அப்டேட் வழியாக யூசர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது.
அதன்படி இனிமேல் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்து, அதில் மியூசிக் சேர்த்து ஸ்டேட்டஸ் வைப்பதைப் போலவே இனி வாட்ஸ் அப்பிலும் செய்ய முடியும்.
ஆண்டராய்ட் மற்றும் ஐஓஎஸ் பீட்டா யூசர்களுக்காக தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த வசதி விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.