இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர். ஏற்கனவே மூன்று பேரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பெண் பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.