ஸ்கோடா நிறுவனம் மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்குகிறது.
2025 பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா நிறுவனம் Superb 4X4 மாடலை டீசல் வெர்ஷனில் அறிமுகப்படுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டில் BS6 transitional phase-ன் போது ஸ்கோடா உட்பட பெரும்பாலான நிறுவனங்கள் டீசல் என்ஜின்களை கைவிட்டு, பெட்ரோல் என்ஜின்களுக்கு முன்னுரிமை கொடுத்தன.
இந்நிலையில் Superb 4X4 மாடல் அறிமுகத்தால், ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு டீசல் எஞ்சின் கார்களில் ஸ்கோடா நிறுவனம் தயாராகி கவனம் செலுத்துவது தெளிவாகியுள்ளது.
இதனிடையே ஸ்கோடா நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஜனேபாவும், இந்திய வாடிக்கையாளர்கள் இன்னும் டீசல் வாகனத்தில் ஆர்வமிக்கவர்களாக உள்ளனர்தெரிவித்துள்ளார்.