பஞ்சாப்பில் கபடி விளையாட சென்ற தமிழக மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், போட்டியை விட்டு வெளியேறுமாறு மாணவிகள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் கபடி தொடரில் பங்கேற்க பஞ்சாப் சென்றனர். இதில் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவிகள் ஃபவுல் ப்ளே செய்ததாக தமிழக மாணவிகள் பயிற்சியாளரான பாண்டியராஜனிடம் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாண்டியராஜன் நடுவரிடம் சென்று முறையிட்ட நிலையில், தமிழக மாணவிகள் மீது சேர்களை வீசி பஞ்சாப் மாணவிகள் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து அன்னை தெரசா கல்லூரி துணை வேந்தர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழக பயிற்சியாரை தனி அறையில் பூட்டி வைத்து எதிர் அணியினர் அடித்ததாக குற்றம்சாட்னார். இது குறித்து தமிழக அரசிடம் புகார் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.