பஞ்சாப் மாநிலத்தில் விளையாட சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலத்தில் விளையாட சென்ற தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெண் வீரர்களை ஆண் பயிற்சியாளர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அங்கு ஆட்சியில் இருக்கிற ஆம் ஆத்மி அரசு, இதுவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு, வெறுமெனே கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெற்று அறிக்கை விடாமல் தாக்கியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கும்வரை ஓயக்கூடாது என அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.