குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இந்தோனேசிய அதிபருக்கு டெல்லி ஐதரபாத் இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இந்தியா வருகை தந்தார். இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் குடியரசு தின விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி ஐதராபாத் இல்லத்துக்கு வந்த அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர், அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.