வேங்கை வயல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன்று பேரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என சிபிசிஐடி தரப்பு உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன்று பேரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது வழக்கு புதுக்கோட்டை ஜேஎம் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் ஆன்லைன் மூலமாக குற்றப்பத்திரிக்கையை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர்.