நடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாக, வீட்டின் உரிமையாளர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு 2021 ஆம் ஆண்டு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். கஞ்சா கருப்பு 3 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும், வீட்டை உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வீட்டை சேதப்படுத்தியுள்ள கஞ்சா கருப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.