திருப்பூரில் போதை ஊசி பயன்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேர் மறைந்திருந்து போதை ஊசி செலுத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக, தகவல் அறிந்த போலீசார், முகமது பைசல், சதாம் உசேன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள், ஆன்லைன் மூலம் போதை மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.