தேர்தல்களில் பங்கேற்பது வெறும் உரிமை மட்டுமல்ல பொறுப்பு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது : “தேசிய வாக்காளர் தினமான இன்று, நமது ஜனநாயகத்தின் வலிமையையும், ஒவ்வொரு வாக்களிப்பின் சக்தியையும் கொண்டாடுவோம்.
தேர்தல்களில் பங்கேற்பது வெறும் உரிமை மட்டுமல்ல, ஒரு பொறுப்பு. துடிப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்திற்கு பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.