வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவரின் கணவர் கிராமசபைக் கூட்டத்தில், ஆயுதப்படை காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்சம்பவம் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக
கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதனடிப்படையிலேயே சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு,
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவேண்டுகோள் விடுத்துள்ளது.