மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமிய அமைப்பினர் பிரியாணி கொண்டு செல்ல முயன்ற சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில், தனது ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், சிக்கந்தர் மலை என கூறி எம்.பி.நவாஸ்கனி சென்று ஆய்வு நடத்தியதால் சர்ச்சையும் எழுந்தது.
பிரிவினையைத் தூண்டும் வகையிலும், இந்து மக்களை புண்படுத்தும் வகையிலும் நடத்து கொண்ட எம்.பி நவாஸ்கனியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமிய அமைப்பினர் பிரியாணி கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கைகளில் இருந்த பிரியாணி பக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை திருப்பி அனுப்பினர்.