பேருந்துகளில் அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை, திண்டுக்கல் போக்குவரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களாக, மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறி, அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ தலைமையில், காமராஜர் பேருந்து நிலையத்தில் 25 -க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என அப்போது எச்சரிக்கை விடுத்தனர்.