பிறருக்கு உதவுவதே சனாதன தர்மத்தின் அடிப்படை என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி நடந்த கலாசார நிகழ்வில் பங்கேற்ற அவர், கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கி இந்தியா உதவியதை நினைவுகூர்ந்தார்.
இந்தியாவிடம் இருப்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தியது மட்டுமன்றி, பிற நாடுகளுக்கும் கொடையாக வழங்கியதை சுட்டிக்காட்டிய சுனில் அம்பேகர், இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.
சனாதன தர்மத்தின் விளைவால்தான் நம்மால் பிற நாடுகளுக்கு உதவ முடிந்ததாகவும், பிறருக்கு உதவுவதே சனாதன தர்மத்தின் மகத்துவம் என்றும் ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.